இந்தியா யமஹா மோட்டார் நிறுவனமானது நாடுமுழுக்க 100 புளூ ஸ்கொயர் விற்பனை மையங்களை கட்டமைத்து இருக்கிறது. இந்திய சந்தையில் ரிடெயில் விற்பனையை உறுதிப்படுத்த 3s நெட் வொர்க்கை யமஹா புளூ தீமிற்குள் கொண்டுவரவும் யமஹா திட்டமிட்டு இருக்கிறது. அத்துடன் புளூ ஸ்கொயர் விற்பனை மையங்கள் யமஹா சர்வதேச சந்தையில் விற்பனை செய்யும் மாடல்களை இந்தியாவுக்கு கொண்டு வரும் என யமஹா தெரிவித்து உள்ளது. எந்தெந்த மாடல்கள் அறிமுகம் செய்யப்படும் என்பது தொடர்பாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
இருப்பினும் யமஹா டெனர் 700 அட்வென்சர் பைக் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்திசெய்யும் ஒற்றை களமாக புளூ ஸ்கொயர் விற்பனை மையம் தொடங்கப்பட்டது. யமஹாவின் ரேசிங் டிஎன்ஏவுடன் வாடிக்கையாளர்கள் இணையும் நோக்கில் புளூஸ்கொயர் விற்பனை மையங்களானது உருவாக்கப்பட்டிருக்கிறது.
யமஹா உருவாக்கி உள்ள புளூ ஸ்டிரீக்ஸ் ரைடர் குழுவில் வாடிக்கையாளர்கள் இணையவும் புளூஸ்கொயர் விற்பனை மையங்கள் பாலமாக செயல்படுகிறது. இந்தியாவில் ஒவ்வொரு புளுஸ்கொயர் விற்பனையகமும் யமஹா நிறுவனத்தின் பிரீமியம் மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்கள்- யமஹா YZF R15M, யமஹா ஏரோக்ஸ் 155 ஆகிய மாடல்களை காட்சிப்படுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி யமஹா-வின் சர்வதேச மாடல்களை அறிமுகம் செய்வதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது.