Categories
தேசிய செய்திகள்

நாடு முழுதும் உள்ள மாணவர்களுக்கு ஒரே சீருடை சாத்தியமாகுமா…..? நீதிமன்றத்தின் பரபரப்பு தீர்ப்பு…..!!!!

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் உள்ள தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கு ஒரே மாதிரியான சீருடையை கொண்டு வர வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. பொதுவாக பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு மத்தியில் எவ்வித பாகுபாடும் இருக்கக் கூடாது என்பதற்காக தான் சீருடை அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சீருடையானது ஒவ்வொரு பள்ளிகளை பொறுத்து மாறுபடும். இந்நிலையில் சமீபத்தில் கர்நாடகாவில் உள்ள கல்லூரியில் ஹிஜாப் அணியக்கூடாது என்று கூறப்பட்டது ஒரு மத கலவரமாகவே மாறிய நிலையில், கேரளாவில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் ஒரே மாதிரியான சீருடை கொண்டு வந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இதன் காரணமாகத்தான் பஜாக வழக்கறிஞர் அஸ்வினி உபாத்யா உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அதில் நாடு முழுதும் உள்ள அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஒரே மாதிரியான சீருடை அறிமுகப்படுத்த வேண்டும் என்று இருந்தது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது வழக்கை விசாரித்த நீதிபதி அனைத்து பள்ளிகளிலும் ஒரே மாதிரியான சீருடையை அமல் படுத்துவது உச்ச நீதிமன்றத்தின் வரம்புக்கு உட்பட்டது கிடையாது.

இந்த விவகாரம் தொடர்பான உத்தரவை பிறப்பிக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு இல்லை என கூறி வழக்கை தள்ளுபடி செய்தார். மேலும் ஒவ்வொரு மாநிலங்களிலும் பருவநிலையை பொறுத்து சூழ்நிலைகள் மாறுபடும். குறிப்பாக காஷ்மீரில் கடுங்குளிர் நிலவும். அதே சமயத்தில் தென் மாநிலங்களில் வெப்பத்தின் தாக்கம் அதிக அளவில் இருக்கும். இதனால் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியான சீருடையை கொண்டு வருவது என்பது சாத்தியமானது கிடையாது என்பதே பலரின் கருத்தாகவும் இருக்கிறது.

Categories

Tech |