தற்போதைய காலகட்டத்தில் அனைவரும் செல்போன் பயன் படுத்தி வருகிறார்கள். தங்களின் அன்றாட வாழ்க்கையில் செல்போன் என்பது ஒரு இன்றியமையாத பொருளாக மாறிவிட்டது. அவ்வாறு செல்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் அனைவரும் தங்கள் தேவைக்கு ஏற்றவாறு பல்வேறு செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர். அதிலும் குறிப்பாக வாட்ஸ்அப், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற செயலிகள் அதிக அளவு பயன்படுத்தப்படுகின்றன. அதில் வாட்ஸ் அப் செயலி அனைத்து விதமான உரையாடல்களும் பயன்படுத்தப்படுகிறது.
இந்நிலையில் மத்திய அரசின் புதிய விதிகளுக்கு இணங்குவது பற்றி ஃபேஸ்புக், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் உள்ளிட்டவை தற்போது வரை பதில் அளிக்கவில்லை. அதனால் இந்த தளங்கள் மீது தடை விதிக்கப்படலாம் அல்லது வழக்கு பதிவு செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. புதிய விதிகளுக்கு பதிலளிக்க இன்றுடன் கால அவகாசம் நிறைவடையும் நிலையில் இதுவரை இந்த தளங்கள் எதுவும் பதில் அளிக்கவில்லை.