இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் வருகின்ற அக்டோபர் மாதத்திற்குள் குழந்தைகளுக்கான கோவாக்சின் தடுப்பூசி பயன்பாட்டிற்கு வரும் என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனர் ரன்தீப் குலெரியா தெரிவித்துள்ளார். கொரோனா மூன்றாவது அலை குழந்தைகளை அதிகம் தாக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது தடுப்பூசி தயாரிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு செலுத்தப்படும் தடுப்பூசி பரிசோதனை நடந்து கொண்டிருக்கிறது என்று அவர் தெரிவித்துள்ளார்.