நாடு முழுவதும் அடுத்த 5 நாட்களுக்கு வங்கிகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் இந்த வருடத்திற்கான பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் நடந்து முடிந்தது. அதில் சில அரசு வங்கிகள் தனியார் மயமாக்கப்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கான அனைத்து பணிகளும் தீவிரமாக நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் அதற்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி ஊழியர்கள் அனைவரும் மார்ச் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்தனர்.
அதன்படி அடுத்த 5 நாட்களுக்கு வங்கிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 11ஆம் தேதி நாளை சிவராத்திரியை முன்னிட்டு வங்கிகளுக்கு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து 13, 14 ஆகிய தேதிகளில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவதால் வார விடுமுறை ஆகவும், மார்ச் 15 மற்றும் 16 ஆம் தேதிகளில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் அறிவித்துள்ளதால் வங்கிகள் இயங்காது எனவும் கூறப்படுகிறது. அதனால் வங்கி தொடர்பான வேலைகள் ஏதாவது உங்களுக்கு இருந்தால் உடனே அதனை முடித்துக் கொள்ளுங்கள்.