சீனாவில் உள்ள பைட் டன்ஸ் என்ற நிறுவனம் செல்போனில் குறுகிய நேர வீடியோக்களை உருவாக்கவும், பதிவேற்றவும் மற்றும் பார்ப்பதற்காகவும் ‘டிக் டாக்’ என்ற செயலியை தயாரித்துள்ளது. இந்த செயலி உலகம் முழுவதும் உள்ள பல தரப்பினருக்கு இடையே அதிக வரவேற்பை பெற்று வருகிறது. இதனால் இந்த செயலி கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த ஆண்டில் அதிகமாக பார்க்கப்பட்ட சமூக வலைத்தளமாக டிக் டாக் கூறப்படுகிறது. அதன்படி கூகுள் பேஸ்புக் போன்ற தளங்களை பின்னுக்கு தள்ளி இந்த வலைதளம் முன்னணியில் இருக்கிறது என்று ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது என்று அமெரிக்காவின் வால்ஸ்ட்ரீட் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் கூகுள் 2 வது இடத்தையும் பேஸ்புக் 3 வது இடத்தையும் பிடித்துள்ளது. தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்தியாவில் டிக் டாக் செயலிக்கு மத்திய அரசு தடை விதித்திருப்பது குறிப்பிடத்தக்கது.