வேலையின்மை காரணமாக தற்கொலை செய்து கொண்டோரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
வேலையின்மை காரணமாக நாடு முழுவதும் ஆயிரக்கணக்கான மக்கள் தற்கொலை செய்துகொண்டு வருகின்றனர். இதுதொடர்பாக மாநிலங்களவையில் மத்திய அரசு புள்ளிவிவரம் கொடுத்துள்ளது. அதில் கடந்த 2018 ஆம் ஆண்டு 2841 பேரும், 2019 ஆம் 2851 பேரும். இதனைத்தொடர்ந்து 2020ம் ஆண்டு 3548 பேர் தற்கொலை செய்து கொண்டதாகவும் அவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
அதனைப் போலவே கடனைத் திருப்பிக் கொடுக்க முடியாத காரணத்தினால் கடந்த 2018 ஆம் ஆண்டு 4970 பேரும் ,2019 ஆண்டு 5908 பேரும் தற்கொலை செய்து கொண்டனர். மேலும் 2020 ஆம் ஆண்டு 5213 பேர் ஆக பதிவாகியுள்ளது.
இதுதொடர்பாக மத்திய அரசு கூறியது மன ரீதியான பாதிப்புகளை சமாளிப்பதற்கு நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் மாவட்ட மனநிலை திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு விதிமுறைகளை கிடைத்திருப்பதாகவும் தற்கொலை தடுப்பு சேவைகள் தனியார் அமைப்புகள் மற்றும் மாநில அரசுடன் இணைந்து மேற்கொள்வதாகவும் தெரிவித்துள்ளது.