கொரோனாவால் தனிமைப்படுத்தப்படும் வீட்டில் உரிய அனுமதி இன்றி நோட்டீஸ் ஓட்டக் கூடாது என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
கொரோனா நோயாளிகளின் வீட்டிற்கு வெளியே இந்த வீட்டில் கொரோனா நோயாளி இருக்கின்றார்கள் என்ற போஸ்டர் ஒட்டப்படுகின்றது. இதனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. குறிப்பாக பார்த்தோமென்றால் போஸ்டர் ஒட்டுவதால், சம்மந்தப்பட்ட வீட்டில் இருப்பவர்களின் தனி உரிமை பாதிக்கப்படுகிறது. மேலும் அவர்களை தீண்டத்தகாதவர்கள் போல் சமுதாயம் பார்கிறது. எனவே இது போன்ற போஸ்டர்களை ஒட்டுவதற்கு அனுமதிக்கக்கூடாது என மனுதாரர்கள் தெரிவித்திருந்தார்கள்.
இந்த வழக்கை நீதிபதி அஷோகபூஷண் தலைமையிலான அமர்வு விசாரணைக்கு எடுத்துக்கொண்டது. பல்வேறு நாட்கள் இந்த வழக்கு நடைபெற்றது. இந்த வழக்கில் மத்திய அரசு பதில் அளிக்கும் போது, இதுபோன்று போஸ்டர் ஒட்ட நாங்கள் எந்த ஒரு உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இது மாநில அரசுகள் எடுத்த முடிவு என தெரிவித்தது.
மேலும் இது கொரோனா பாதிக்கப்பட்டு வீடு என்பது அடையாளப்படுத்துவதற்கு உதவும் எனவும், யாரும் அங்கு சென்று விடவும் கூடாது, பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்கான ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தான் இதை எடுத்திருக்கிறார்கள். எனவே இது மத்திய அரசினுடைய எந்த உத்தரவும் கிடையாது என தெரிவித்தார்கள்.
இதனை அடுத்து இது தனி மனிதனுடைய உரிமையை பாதிக்கக்கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது. அவர்கள் தீண்டத்தகாதவர்கள் போல பார்க்கப்படுகிறார்கள் என வருத்தத்தையும் உச்சநீதிமன்றம் பதிவு செய்திருந்தது. இதனையடுத்து தற்போது இந்த வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பை வழங்கியுள்ளது.
உச்சநீதிமன்ற உத்தரவில், பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் தேவைப்படும் பட்சத்தில் மட்டும் அனுமதி பெற்ற பிறகே நோட்டீஸ் ஒட்ட வேண்டும் என்று ஒரு உத்தரவைப் பிறப்பித்திருக்கிறார். தேவையில்லாமல் உரிய உத்தரவு, அனுமதி இல்லாமல் இது போன்ற போஸ்டர்களை ஒட்டக்கூடாது என்ற ஒரு உத்தரவையும் உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.