Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அதிரடி உத்தரவு – மத்திய அரசு நடவடிக்கை….!!

ஆன்லைன் வகுப்புகள் தொடர்பான விதிமுறைகளை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளியிட்டு இருக்கிறது.

நாடு முழுவதும் கொரோனா காலத்தில் மாணவர்களுக்கு கல்வியை கொண்டு சேர்ப்பதற்கு ஆன்லைன் மூலமாக கல்வி எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நேரத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் ஆன்லைன் வகுப்புகளுக்கான விதிமுறைகளை வெளியிட்டிருக்கிறது. எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு குறைந்தது 30 நிமிடங்கள் மட்டுமே ஆன்லைனில் நடத்த வேண்டும். ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை முதல் 45 நிமிடங்கள் என 2 பிரிவாக வகுப்பு நடத்தலாம்.

இதுவே 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் என்றால் அவர்கள் 45 நிமிடங்கள் என 4 பிரிவாக வகுப்பு எடுக்கலாம். ஒவ்வொரு பிரிவுகளும் 45 நிமிடங்கள் மட்டும் தான் இருக்க வேண்டும். அதற்கு மேலாக தொடர்ச்சியாக ஆன்லைன் வகுப்புகள் எடுக்க கூடாது என்பதை சொல்லி இருக்கின்றார்கள். ஆன்லைன் வகுப்புகள் குறித்து ஏராளமான புகார்கள் தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்தது. இந்த ஆன்லைன் மூலமாக மாணவர்களின் உடல் நலம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

நிறைய இடங்களில் 8 மணி நேரம்,  10 மணி நேரம் என ஆன்லைன் வகுப்புகள் நடத்துவதாக சொல்லப்படுகிறது. எனவேதான் ஆன்லைன் வகுப்பு சம்பந்தமான ஒரு விரிவான வழிகாட்டுதல்களை தற்போது மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சார்பாக வெளியிடப்பட்டு இருக்கிறது. இது பெற்றோர்களுக்கும், மாணவர்களுக்கும் மகிழ்ச்சியான உத்தரவாக பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |