நாடு முழுவதும் கொரோனா பெருந்தொடருக்கு எதிரான மிகப்பெரிய போராட்டத்தில் மருத்துவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களுக்கு இணையாக முன்கள பணியாளர்களாக காவலர்கள், சுகாதார ஊழியர்கள், மருத்துவ ஊழியர்கள் என பலரும் தங்களது உயிரை துட்சமென நினைத்து பணியை செய்து வருகிறார்கள். ஒவ்வொரு முறையும் மத்திய மாநில அரசாங்கங்கள் அவர்களின் பணியை நினைவுகூர்ந்து பாராட்டி வருகின்றனர்.
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவர்கள் போற்றப்பட வேண்டியவர்கள், தன்னலமற்றவர்கள், சேவை மனப்பான்மை கொண்டவர்கள் என்று தொடர்ந்து பிரதமர் மோடியால் சொல்லப்பட்டு வந்திருந்தார்கள். அதன் ஒரு பகுதியாக தற்போது அவர்களை மேலும் ஊக்கம் அளிக்கும் வகையில் மத்திய அரசு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.
கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் உள்ளிட்ட முன்கள பணியாளர்களை சுதந்திர தின விழாவிற்கு அழைக்க வேண்டும் என மத்திய அரசு கூறியிருக்கிறது. கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் சிலரையும் சுதந்திர தின நிகழ்ச்சிக்கு அழைக்கலாம் என்று மத்திய அரசு தெரிவித்திருக்கிறது. நாடு முழுவதும் கொரோனாவுக்கு எதிரான போரில் ஈடுபட்டவர்களை மேலும் மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் மத்திய அரசு அறிவிப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.