Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அதிர்ச்சி – புதிய இடங்களில் பரவிய தொற்று

நேற்று டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் செயலாளர் ராஜேஷ் பூஷன், இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் 66 சதவீதம் பேர் 50 மாவட்டங்களை சேர்ந்தவர்கள். தற்போது உயிரிழப்பு 2.10 சதவீதமாக குறைந்துள்ளது. ஊரடங்கு போட்ட மார்ச் 25ஆம் தேதியில் இருந்து கணக்கிட்டால் தற்போதைய உயிரிழப்பு குறைவாகும். கொரோனா மொத்த பாதிப்பில் 82 சதவீதம் பத்து மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களில் மட்டுமே உள்ளது. தொற்று புதிய இடங்களில் பரவி இருக்கின்றது.

இறந்தவர்களின் எண்ணிக்கை 38 ஆயிரத்து 938 இதில் 68 சதவீதம்.  ஆண்கள், 32 சதவீதத்தினர் பெண்கள். பெண்களைவிட ஆண்கள் அதிகமான உயிரிழந்துள்ளனர். இறந்தவர்களில் பாதி வேர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். 45- 60 வயதுக்குட்பட்ட 37 சதவீதம் பேரும்,  26 – 44 வயதுக்குட்பட்டோர் 11 சதவீதம் பேரும் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வீடு திரும்புவோர் எண்ணிக்கை 12.30 லட்சமாகும். சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கையை விட இரண்டு மடங்கு அதிகமாகும். 28 மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் தினமும் 10 லட்சம் பேரில் 140 என்ற விதத்தில் ரத்த மாதிரி பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவில் ஒரே நாளில் 10 லட்சத்து 479 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன.

Categories

Tech |