CBSE தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னரே மாணவர் சேர்க்கையை முடித்துக் கொள்ள கூடாது என்று நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவு பிறப்பித்துள்ளது. கோடை விடுமுறைக்கு பிறகு தமிழகத்தில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் வரும் 18ஆம் தேதி திறக்கப்படும் CBSE மாணவர்களுக்கு இன்னும் தேர்வு முடிவுகள் வெளியாகவில்லை. அதனால் CBSE தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னரே மாணவர் சேர்க்கையை முடித்துக் கொள்ள கூடாது என்றும் மாணவர்களுக்கு உரிய அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அனைத்து கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Categories