Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அமுலாகும் ஊரடங்கு? பிரதமர் அவசர ஆலோசனை…. மத்திய அரசு திடீர் விளக்கம்….!!!!

உலகம் முழுவதும் பி எஃப் 7 வகை கொரோனா அதிவேகமாக பரவி வருவதால் ஏழு நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக youtube சேனல் ஒன்றில் செய்தி பரவியது. இதற்காக மோடி அரசு அவசர ஆலோசனை நடத்தி வருவதாகவும் இதில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இந்நிலையில் அந்த செய்தி உண்மையில்லை என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதில் கூறப்படும் செய்தி வதந்தி என்றும் அரசு அதுபோன்ற எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது. தற்போது இருக்கும் சூழலில் விமானங்களை ரத்து செய்வதற்கோ அல்லது ஊரடங்கு அமல்படுத்துவதற்கு அவசியமில்லை என்று மருத்துவ நிபுணர்கள் கூறியது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |