இந்தியாவில் தர நிர்ணய கழகத்தின் உரிமம் மற்றும் சான்றிதழ் பெறுவதற்கான ஆண்டு கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் குறு தொழில்கள், ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், பெண் தொழில் முனைவோர் ஆகியோர் புதிதாக இந்திய தர நிர்ணய கழகத்தின் உரிமம் மற்றும் சான்றிதழ் பெறுவதற்கான ஆண்டு கட்டணத்தை 50 சதவீதம் குறைத்து மத்திய அரசு அறிவித்துள்ளது. ஏற்கனவே உரிமம் வைத்திருப்பவர்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது. இது அரசாங்கத்தின் உள்ளூர் தயாரிப்பு பிரசாரத்திற்கு ஊக்கம் அளிக்கும் என மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.