ஆயுஷ்மான் பாரத் மிகப்பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாகும். ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு பயனாளிக்கும் 5 லட்சம் ரூபாய் வரை மருத்துவக் காப்பீடு வழங்கப்படுகிறது. இதுவரை உலகிலேயே மிகப்பெரிய மருத்துவக் காப்பீட்டுத் திட்டமாக (Health Insurance) உள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் சுகாதாரம் மற்றும் நல்வாழ்வு மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் வீட்டில் இருந்தே மருத்துவ ஆலோசனை பெறும் வசதியானது “இ-சஞ்சீவனி” முறையை அமல்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி ஒரு லட்சம் நல்வாழ்வு மையங்களின் இன்று முதல் இ- சஞ்சீவினி முறை அமல்படுத்தப் போவதாக மத்திய அமைச்சர் மன்சூக் மண்டவியா தெரிவித்துள்ளார்.