Categories
மாநில செய்திகள்

“நாடு முழுவதும் இதே நிலமை தான் நிலவுகிறது”…. சென்னை ஐகோர்ட் வேதனை….!!!!!!!!

திருவள்ளூர் மாவட்டம் வடபெரும்பாக்கம் பகுதியில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்பட்டிருந்த கட்டிடத்திற்கு ஐகோர்ட்டு உத்தரவின்படி மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. ஐகோர்ட்டு தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்டுள்ள மேல்முறையீட்டு வழக்கு தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது நீர்நிலை ஆக்கிரமிப்பு பற்றி நீதிபதிகள் கடுமையான அதிருப்தியை தெரிவித்துள்ளனர். மேலும் இயற்கைக் கொடையாக அளித்த பல்வேறு நீர்நிலைகள் தமிழகத்தில் உள்ளது. இருந்தாலும் கூட வேலூர் மாவட்டத்தில் ஒரு கிராமத்தில் 6 நாட்களுக்கு ஒருமுறைதான் தண்ணீர் வழங்கப்படுகின்றது.

இந்த ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளாமல் இருக்கின்ற அரசு அதிகாரிகளின் மெத்தன போக்கு தான் இந்த நிலைக்கு காரணம் என நீதிபதிகள் கூறியுள்ளனர். மேலும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்ற அரசு அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாகவும் இவர்கள் எதற்காக ஊதியம் பெறுகிறார்கள் எனவும் தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியுள்ளார். இதனையடுத்து இந்த வழக்கை வாபஸ் பெறுவதற்காக மனுதாரர் தரப்பில் கூறப்பட்டது. இந்த நிலையில்  அந்த வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இதேபோல் மற்றொரு வழக்கில் அதிகாரிகள் தங்கள் பணிகளை செய்வதில் குறை இருந்தால் அதற்கு காரணம் அரசாகத்தான் இருக்கும் என பொது மக்களுக்காக எந்த அதிகாரிகளும் தங்கள் பணியை செய்வது இல்லை என ஒரு குற்றச்சாட்டை நீதிபதிகள் முன்வைத்துள்ளனர். பெரும்பாலான அதிகாரிகள் லஞ்சம் பெறாமல் எந்த ஒரு பணியையும் செய்வதில்லை எனவும் சுட்டிக் காட்டியது மட்டுமல்லாமல் இந்த நிலைமை தமிழ்நாட்டில் மட்டுமல்ல நாடு முழுவதும் இதே நிலைதான் நிலவி வருகின்றது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Categories

Tech |