நாடு முழுவதும் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட பைக் மற்றும் கார் வாகனங்கள் வைத்திருப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய காலகட்டத்தில் மனிதர்களின் வாழ்க்கை முழுவதும் மிக நவீனமாகி விட்டது. அதிலும் குறிப்பாக அனைவரும் தற்போது வாகனங்கள் பயன்படுத்தி வருகிறார்கள். அன்றைய காலகட்டத்தில் எங்கேயாவது செல்ல வேண்டும் என்றால் நடந்தோ அல்லது மாட்டு வண்டி மூலமாக தான் செல்வார்கள். ஆனால் இப்போது பைக், கார், பேருந்து மற்றும் ரயில் கள் என அனைத்து சேவைகளும் வந்துவிட்டன. அதில் சில வாகனங்களால் சுற்றுச்சூழல் மிகவும் மாசுபடுகிறது. அதில் சிலருக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய வகையிலும் உள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட பைக், கார் வாகனங்கள் வைத்திருப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவை மீறி மாடிஃபிகேஷன் செய்யப்பட்ட பைக் வைத்திருப்பவர்களிடம் ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து வருவதாகவும், இதையும் மீறி அந்த வாகனங்களைப் பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.