Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இனி “ஒரே நாடு, ஒரே உரம்”…. மத்திய அரசு போட்ட அதிரடி உத்தரவு…. ரூல்ஸ் இதுதான்….!!!!

இந்தியாவில் ஒரே நாடு ஒரே உரம் என்ற திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் உள்ள அனைத்து உர நிறுவனங்களும் தங்கள் பொருட்களை பாரத் என்ற பெயரில் விற்பனை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு அதிரடியாக உத்தரவை பிறப்பித்துள்ளது. ஆனால் உர நிறுவனங்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.இதனால் வர்த்தக முத்திரை மற்றும் விவசாயிகள் உடனான ஈடுபாடு இரண்டையும் பாதிக்கும் என அந் நிறுவனங்கள் கூறுகின்றது. PMBJP திட்டத்தின் கீழ் உர நிறுவனங்களுக்கு அரசாங்கம் மானியத்தை வழங்கி வருகின்றது.

அதன் பலன்களை நிறுவனங்கள் விவசாயிகளுக்கு வழங்கும்.எனவே இந்த திட்டத்தின் லோகோவை உரங்களின் பைகளில் வைக்குமாறு நிறுவனங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இருந்தாலும் இந்த நடவடிக்கை சந்தையில் தேவையற்ற சீரான தன்மையை கொண்டு வரும் என நிறுவனங்கள் கூறுகின்றன.உரம் பைகளில் முத்திரை பதிக்க முழு இடத்தையும் கருத்தில் கொண்டு புதிய திட்டத்தின் படி நிறுவனங்கள் தங்களின் பெயர் லோகோ மற்றும் பிற தயாரிப்பு தகவல்களை மூன்றில் ஒரு பங்கு இடத்தில் மட்டுமே படிக்க வேண்டும். மீதமுள்ள மூன்றில் இரண்டு பங்கு இடம் பாரத் பிராண்ட் மற்றும் இந்த திட்டத்தின் லோகோவிற்கு செல்லும் என அரசு அறிவித்துள்ளது.

Categories

Tech |