நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் வழங்கப்படும் சர்வதேச ஓட்டுனர் உரிமங்களின் வடிவம், அளவு மற்றும் வண்ணம் உள்ளிட்டவற்றில் பல்வேறு வேறுபாடுகள் இருந்து.அதனால் வெளிநாடுகளில் இந்த சர்வதேச ஓட்டுனர் உரிமத்தை பயன்படுத்தக்கூடிய மக்கள் பலரும் சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில் ஜெனிவாஒப்பந்தத்தின் படி நாடு முழுவதும் ஒரே மாதிரியான சர்வதேச ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுகிறது. இந்த ஓட்டுனர் உரிமத்துடன் சர்வதேச ஓட்டுனர் உரிமத்தை இணைப்பதற்கு qr கோடு விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
அதாவது உதவி எண்களும் மின்னஞ்சல் முகவரிகளும் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு நாடு முழுவதும் கமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.மேலும் முழு விவரங்களுக்கு மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகத்தில் இணையதள பக்கத்தை அணுகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.