இந்தியாவில் மாநிலம் மற்றும் மத்திய கல்வி வாரியங்களில் பல்வேறு பாடத்திட்டங்கள் பின்பற்றப்படுவதால் மதிப்பெண்களில் ஏற்றத்தாழ்வு நிலவுகிறது.அதன் காரணமாக இடைநிலை மற்றும் மேல்நிலை மாணவர்களின் நிலையை அறிய மாநில முழுக்க ஒரே பாடத்திட்டத்தை கொண்டு வருவதற்கு மத்திய அரசு புதிதாக திட்டமிட்டுள்ளது.கடந்த சில வாரங்களாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் மாநில வாரியங்கள் மற்றும் மாநில கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில்களின் பிரதிநிதிகள் மாநில முழுக்க ஒரே பாடத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக திட்டமிட்டு வருகிறார்கள்.
இந்த திட்டத்தை செயல்படுத்த புதிய மதிப்பீட்டு ஒழுங்குமுறை ஆணையம் PARAKH அமைக்கப்பட்டுள்ளது. இது ஒவ்வொரு மாநிலத்திலும் கலந்துரையாடிய போது பெரும்பாலான மாநிலங்கள் வருடத்திற்கு இரண்டு முறை தேர்வினை நடத்துவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளன. கணிதத்தில் இரண்டு தாள்களை அறிமுக செய்ய வேண்டும்,முதல் தாள் நிலையான தேர்வாகவும் இரண்டாம் தாள் மாணவர்களின் உயர்மட்ட திறனை சோதிக்கும் தேர்வாகவும் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய திட்டம் மாணவர்களுக்கு கணிதத்தின் மீது இருக்கும் பயத்தை குறைக்கும் என்றும் கற்றலை ஊக்குவிக்க உதவும் எனவும் அரசு தெரிவித்துள்ளது. கணிதம் மட்டுமல்லாமல் அனைத்து பாடங்களுக்கும் இரண்டு செட் வினாத்தாள்கள் இருக்க வேண்டும் என தேசிய கல்விக் கொள்கை அறிவித்துள்ளது.எனவே விரைவில் நாடு முழுவதும் பத்து மட்டும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.