Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இனி… IRCTC செயலி மூலம் டிக்கெட் முன்பதிவு… செம அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் இனி IRCTC என்ற செயலி மூலம் பேருந்து டிக்கெட் முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரயில்வேக்கு சொந்தமான IRCTC செயலி மூலம் இனி நாடு முழுவதும் பேருந்து டிக்கெட் முன்பதிவு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஐஆர்சிடிசி மொபைல் செயலி மூலம் அடுத்த மாதம் முதல், பயணிகள் பேருந்து டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்காக பல்வேறு மாநில பேருந்து போக்குவரத்து கழகங்கள், தனியார் பேருந்து நிறுவனங்களுடன் ஐஆர்சிடிசி ஒப்பந்தம் செய்துள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான பயண அனுபவத்தை வழங்க வேண்டும் என்பதற்காக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் பயனடைய முடியும். இதற்கான சலுகையும் மிகக் குறைவுதான்.

Categories

Tech |