Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் இன்னும் ஒரு மணி நேரத்தில் முக்கிய அறிவிப்பு …!!

கொரோனா ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. இதனால் தனிநபர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே மக்களுக்கு பல்வேறு சலுகைகளை ரிசர்வ் வங்கி அறிவித்து வருகிறது. இந்த சூழலில்தான் இன்று 12 மணிக்கு ரிசர்வ் வங்கி சார்பாக முக்கிய செய்தியாளர் சந்திப்பு இருக்கிறது.

ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ், நிதிக்கொள்கை ஆய்வு கூட்டத்திற்கு பிறகு இன்று பிற்பகல் 12 மணிக்கு செய்தியாளர்களைச் சந்திக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. செய்தியாளர் சந்திப்பின்போது பல முக்கிய அறிவிப்பை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக வட்டி விகிதம் குறைப்பு, வங்கிக்கடன், நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையில் சில அறிவிப்புகள் இருக்கும் என கூறப்படுகிறது

Categories

Tech |