நாடு முழுவதும் இன்னும் சற்று நேரத்தில் நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார்.
ஜனாதிபதி முன்னிலையில் நாட்டில் முதல் கூட்டத்தொடர் தொடங்கியது. இதனை அடுத்து நாடு முழுவதும் இன்னும் சிறிது நேரத்தில் நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிதிநிலை அறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவுள்ளார். நாடு சுதந்திரம் அடைவதில் இருந்து ஆவணங்கள் எதுவும் இன்றி ஸ்மார்ட் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவது இதுவே முதல் முறை. இதன் மூலம் அரசுக்கு 140 கோடி மிச்சமாகும். நிதிநிலை அறிக்கையில் வருமான வரி குறித்த சலுகை இருக்குமா என அனைத்து தரப்பு மக்களும் ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கின்றனர்.
கொரோனா பொது முடக்கத்தான் நலிந்து போன சிறு மற்றும் குறு நடுத்தர தொழில்களை மீட்டெடுக்கும் வகையில் சலுகைகள் இருக்க வாய்ப்புள்ளது. பட்ஜெட் தாக்கல் செய்வதாக குடியரசுத் தலைவரிடம் முறைப்படி தெரியப்படுத்தியுள்ளார் நிதியமைச்சர். பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இந்த பட்ஜெட் உரை முடிவடைந்தவுடன் யூனியன் பட்ஜெட் என்ற செயலி மூலம் தகவல்கள் அனைத்தும் பதிவிறக்கம் செய்ய முடியும் என தெரிவித்துள்ளது.