கொரோனா ஊரடங்கால் நாட்டின் பொருளாதாரம் கடும் சரிவை சந்தித்துள்ளது. இதனை மீட்டெடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளையும், அறிவிப்புகளையும் அறிவித்திருக்கின்றன. மத்திய அரசு கூட ஏராளமான அறிவிப்புகளை அறிவித்தது மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. அதைத் தொடர்ந்து இன்றும் நாட்டு மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய அறிவிப்பை பிரதமர் நரேந்திர மோடி அறிவிக்கிறார்.
நாடு முழுவதும் வேளாண் உள் கட்டமைப்பை பெருக்க பிரதமர் விவசாய நல நிதி திட்டத்தின் கீழ் இதுவரை 9.9 கோடி விவசாயிகளுக்கு ரூபாய் 75,000 கோடி நேரடியாக வழங்கப்பட்டுள்ளது. இதன் 6ஆவது தவணையாக 8.5 கோடி விவசாயிகள் பயனடையும் வகையில் 17,000 கோடி மதிப்பிலான நலத் திட்டங்களை பிரதமர் மோடி இன்று விவசாயிகள் மத்தியில் அறிவிக்கிறார்.