இந்தியா முழுவதும் பால் விற்பனை செய்து வரும் முன்னணி நிறுவனமான ‘மதர் டைரி பால்’ நிறுவனம் பால் விற்பனை விலையை உயர்த்தியுள்ளது. மார்ச் மாத தொடக்கத்திலேயே அமுல், ஆவின் உள்ளிட்ட பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டு அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது மதர் டைரி பாலின் விலையும் அதிகரிக்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
அதிகரித்து வரும் எரிபொருள் செலவு மற்றும் பிற அத்தியாவசிய செலவுகள் தொகை அதிகரிப்பால் பால் பொருட்களின் விலை உயர்த்தப்படுவதாகவும் அறிவித்துள்ளது. இன்று (மார்ச்.6) முதல் இந்த விலை அமலுக்கு வருகிறது. அதாவது தற்போது ஒரு பாக்கெட் (500 மி.லி) ரூ. 2 ஆக அதிகரித்துவிட்டது. மேலும் 1 மி.லி ரூ. 1 ஆக அதிகரித்துவிட்டது.