இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கியுள்ளது.
இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்தி கொள்ள இன்று முதல் கோவின் ஆப் செயலி மூலம் மட்டுமே பதிவு செய்ய வேண்டும் என அரசு அறிவித்துள்ளது. அரசு கொள்முதல் கொள்கையை மாற்றி அமைப்பதால் தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி செலுத்த கோவின் ஆப் மூலம் பதிவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளது.