நாடு முழுவதும் இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட வேண்டும் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார்
சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது. அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டன.
அதன் பிறகு தற்போது வரை நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வந்தது. அதனால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள். இந்நிலையில் மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், குஜராத், கர்நாடகா மற்றும் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது.
அதனால் மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்து உள்ளதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது இரவு நேர ஊரடங்கு இரவு 9 மணி முதல் மாலை 5 மணி வரை அமல் படுத்துவது நல்லது என அனைத்து மாநில முதல்வர்களுக்கும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். இரவு நேர ஊரடங்கு உள்ள பகுதிகளில் கொரோனா ஊரடங்கு என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம். மேலும் ஏப்ரல் 11 முதல் 14 ஆம் தேதி வரை தடுப்பூசி திருவிழாவை நடத்தலாம். கொரோனா முதல் அலையை கடந்துவிட்டோம். தற்போது இரண்டாவது அலையை எதிர்த்து நாம் போரிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.