கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது. எனவே அனைத்து மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. கொரோனா தொற்றுக்கு நம்மிடம் உள்ள ஒரே ஆயுதம் தடுப்பூசி மட்டுமே. அதனால் தடுப்பூசி செலுத்தும் பணி நாடு முழுவதும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இதனிடையே குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு 15 வயது முதல் 18 வயதுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கி உள்ளது. மேலும் இன்று முதல் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியை தேவைப்பட்டால் இரவு 10 மணி வரை நீட்டிக்கலாம் என்றும், அனைத்து தடுப்பூசி மையங்களுக்கும் மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் மனோகரன் இன்று கடிதம் எழுதியுள்ளார்.