நாடு முழுவதும் அடுத்த 2 ஆண்டுகளில் ஏழைகளுக்கு ஒரு கோடி இலவச எல்பிஜி இணைப்புகளை வழங்கப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவைகள் முற்றிலும் முடக்கப்பட்டது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். அப்போது மக்களின் அன்றாட தேவைக்கான பொருட்கள் அனைத்தும் மிக மலிவான விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது.
இந்நிலையில் நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் மற்றும் சிலிண்டர் எரிவாயு போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதனை அடுத்து நாடு முழுவதும் அடுத்த 2 ஆண்டுகளில் ஏழைகளுக்கு மேலும் ஒரு கோடி இலவச எல்பிஜி இணைப்புகளை வழங்கப் போவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும் சிலிண்டர் தீர்ந்தவுடன் 3 டீலர்களிடம் இருந்து புதிய சிலிண்டர்களை எளிதாகப் பெறும் வகையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது