நாடாளுமன்றத்தில் மின்சார சட்டத்திருத்த மசோதா கொண்டுவரப்பட்ட நிலையில் அதற்குத் தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் தமிழக அரசு இந்த மசோதா ஏழை மக்களைப் பாதிக்கும் வகையில் அமைத்துள்ளது என்று விமர்சித்தது, இந்த நிலையில் மின்சார சட்ட திருத்தத்தால் நாடு முழுவதும் வழங்கப்படும் இலவச மின்சாரம் ரத்து செய்யப்படாது என மத்திய மின்சாரத்துறை செயலாளர் அலோக் குமார் விளக்கமளித்துள்ளார்.
அத்துடன் 65 ஆவது பிரிவில் மாநில அரசுகள் எந்த தரப்பு நுகர்வோருக்கும் மானிய விலையில் மின்சார பழங்கள் என குறிப்பிட்டுள்ளதை சுட்டிக்காட்டி உள்ளார்.அந்தப் பிரிவில் எந்த மாற்றமும் சட்ட திருத்தத்தில் செய்யப்படவில்லை என அவர் கூறியுள்ளதால் பொதுமக்கள் பெருமகிழ்ச்சி அடைந்துள்ளனர்.