Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் உச்சகட்ட அதிர்ச்சி….! ஒரே நாளில் எகிறிய எண்ணிக்கை… மிரட்டும் உருமாறிய கொரோனா ….!!

இந்தியாவில் உருமாறிய கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 58 ஆக அதிகரித்திருக்கிறது.

இந்தியாவில் மொத்தம் ஆறு இடங்களில் உருமாறிய கொரோனா மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தலைநகர் டெல்லியில் இரண்டு இடங்களிலும், கல்கத்தாவில் ஒரு இடத்திலும், புனே, ஹைதராபாத் மற்றும் பெங்களூர் என 6 இடங்களில் சோதனை மேற்கொள்ளப்பட்டு வரக்கூடிய நிலையில் நேற்றைய தினம் வெறும் 38 ஆக இருந்த உருமாறிய கொரோனா எண்ணிக்கை தற்போது 58 ஆக மாறி இருக்கிறது.

இதில் ஒரே நாளில் புனேவில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் மட்டும் 20 நபர்களுக்கு புதிதாக உருமாறிய கொரோனா இருப்பது உறுதியாகி இருக்கிறது. நேற்று வரை வெறும் ஐந்து நபர்களுக்கு மட்டுமே புனேவின் நேஷனல் வைராலஜி டிபார்ட்மெண்டில் சோதனை முடிவுகள் இருந்த நிலையில் தற்போது 25 ஆக உயர்ந்திருக்கிறது.தற்போது இந்த நிலைமை என்பது முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Categories

Tech |