நாட்டிலுள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் உடனடியாக சிசிடிவி அமைக்கும் பணிகள் தொடங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
சாத்தான்குளம் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. அதன் காரணமாக நாட்டில் அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அதனால் நாட்டில் உள்ள அனைத்து மாநில அரசுகள், யூனியன் பிரதேச அரசுகள் மற்றும் காவல் நிலையங்களில் சிசிடிவி அமைக்கும் பணிகளை உடனடியாக தொடங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
அதன்படி நாடு முழுவதிலும் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் சிசிடிவி பொருத்தும் பணி தீவிரமாக நடந்து கொண்டிருக்கிறது. உயர் நீதிமன்றத்தில் இந்த அதிரடியான உத்தரவு நாடு முழுவதிலும் சற்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.