நாட்டில் சமையல் எண்ணெயின் அதிகபட்ச சில்லறை விலையில் 15 ரூபாயை உடனடியாக குறைக்க வேண்டும் என்று சமையல் எண்ணை உற்பத்தி நிறுவனங்களுக்கு மத்திய நுகர்வோர் விவகாரம், உணவு மற்றும் பொது வளங்கள் துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், எண்ணெய் உற்பத்தியாளர்களும் சுத்திகரிப்பு நிறுவனங்களும் தங்களது விநியோகஸ்தர்களுக்கு வழங்கும் எண்ணையின் விலையிலும் விலை குறைப்பை உடனே அறிவிக்க வேண்டும்.
சமையல் எண்ணெய் மீதான விலை குறைப்பை உடனே அமல்படுத்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனவே நாடு முழுவதும் சமையல் எண்ணெய் குறைப்பு உடனடியாக அமலுக்கு வருகிறது. இந்த விலை குறைப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.