Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் உணவகங்களில் இனி…. சேவை கட்டணம் வசூலிக்க கூடாது…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் வாடிக்கையாளர்களிடமிருந்து சேவை கட்டணம் எதையும் வசூல் செய்யக்கூடாது என்று மத்தியில் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகள் கட்டண ரசீதில் சேவை கட்டணத்தை விதிப்பதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன. இந்நிலையில் சிசி பி ஏ தலைமை ஆணையர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், உணவகங்களும் தங்கும் விடுதிகளும் தாமாக இனி சேவை கட்டணத்தை விதிக்கக்கூடாது.

வேறு எந்த ஒரு பெயரிலும் வாடிக்கையாளர்களிடமிருந்து சேவை கட்டணத்தை வசூல் செய்யக்கூடாது. சேவை கட்டணம் செலுத்த வாடிக்கையாளர்களை யாரும் கட்டாயப்படுத்த முடியாது.வாடிக்கையாளர் விரும்பினால் மட்டுமே சேவை கட்டிடத்தை வழங்க முடியும்.இதனை மீறி உணவகம் அல்லது தங்கும் விடுதி சேவை கட்டணத்தை வசூல் செய்தால் வாடிக்கையாளர்கள் அது தொடர்பாக நுகர்வோர் ஆணையத்தில் புகார் அளிக்கலாம்.

மேலும் தேசிய நுகர்வோர் உதவி மையத்தின் தொலைபேசி எண்ணான 1915என்ற என் மூலமாகவும் அல்லது தேசிய நுகர்வோர் உதவி மையத்தின் செயலி மூலமாகவும் புகார் தெரிவிக்கலாம். இணைய வழியாகவும் புகார் தெரிவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |