Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் உயர்வு… பொதுமக்களுக்கு புது ஷாக்…. பட்ஜெட்டில் அறிவிப்பு …!!

நாளை முதல் பெட்ரோல் டீசலுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் மற்றும் டீசல் மீது புதிதாக கூடுதல் வரி விதிக்கப்பட்டு இருக்கிறது. இது பெட்ரோல் டீசல் மட்டுமல்ல பல்வேறு முக்கிய பொருட்கள் மீது விதிக்கப்பட்டு இருக்கிறது. இதில் இறக்குமதி செய்யப்படும் தங்கம், வெள்ளி போன்ற பொருட்களும் அடக்கம். அதைத்தவிர இறக்குமதி செய்யப்படும் மதுபானங்கள் போன்றவையும் அடக்கம். வேளாண்  கட்டமைப்பு மேம்பாட்டுக்கு கூடுதல் வரி பெட்ரோல் மற்றும் டீசல் மீது தற்போது அமல்படுத்தப்பட்டு இருந்தாலும், இதனால் உடனடியாக சில்லரை விலை உயராது என அதிகாரிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

இதன் காரணமாக மத்திய அரசுக்கான வரி குறையாமல் இருக்கும். ஆனால் மாநிலங்களுக்கு கிடைக்கக்கூடிய வாட் வரி குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்படுகிறது. இந்த புதிய வரி பல்வேறு பொருட்கள் மீது அமல்படுத்தப்பட்டு இருக்கிறது. அதில் இறக்குமதி செய்யப்படும் சமையல் எண்ணெய்,  இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள் மற்றும் இறக்குமதி செய்யப்படும் நிலக்கரி போன்ற பல்வேறு பொருட்கள் அடக்கம். இதனால் நாளை முதல் பெட்ரோல், டீசல் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |