Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் எதிர்பார்ப்பு…! மத்திய பட்ஜெட் தாக்கல்….!!

கொரோனா வைரஸ் பெருந்தொற்றால், மிக நீண்ட அளவிலான பொது ஊரடங்கு நாடு முழுவதும் கடைபிடிக்கப்பட்டது. இதனால் தொழில்கள், வேலைவாய்ப்புகள், வர்த்தக நடவடிக்கைகள் பெருமளவு முடங்கி, பொருளாதார சரிவு ஏற்பட்டு, பழைய நிலைக்குத் திரும்ப முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இந்தச் சூழலில் 2021-22 நிதி ஆண்டுக்கான மத்திய  நிதி நிலை அறிக்கையை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்ற மக்களவையில் இன்று காலை 11 மணிக்கு தாக்கல் செய்ய இருக்கிறார். இது நாட்டின் முதல் டிஜிட்டல் நிதி நிலை அறிக்கை ஆகும்.

நிதி நிலை அறிக்கையின் அங்கீகரிக்கப்பட்ட பிரதி மக்களவையில் உடனடியாக தாக்கல் செய்யப்பட்டு, அரசின் அதிகாரப்பூர்வ இணையப் பக்கங்களில் வெளியிடப்படயிருக்கிறது.  இதற்காக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், மத்திய இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் நிதி அமைச்சக அலுவலகத்தில் இருந்து மத்திய நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்ய புறப்பட்டனர். அப்போது நாட்டில் முதல்முறையாக காகிதம் இல்லாமல் தாக்கல் செய்யப்படும், நிதி நிலை அறிக்கையை வைத்திருக்கும் டேப்லெட்டை பத்திரிகையாளர்களுக்கு முன் நிர்மலா சீதாராமன் காட்டினார் காட்டினர்.

இதையடுத்துமத்திய நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்கு முன்,  மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இணை அமைச்சர் அனுராக் தாக்கூர் ஆகியோர் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்தை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர். இதனிடையே காங்கிரஸ் எம்.பி.க்கள் ஜஸ்பீர் சிங் கில் மற்றும் குர்ஜீத் சிங் ஆஜ்லா ஆகியோர் மூன்று வேளாண் சட்டத்துக்கு எதிரான போராட்டத்தின் அடையாளமாக நாடாளுமன்றத்திற்கு கருப்பு நிற கவுன் அணிந்து வந்தனர். சரியாக 11 மணி ஆனதை தொடர்ந்து மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

Categories

Tech |