நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு ஏப்ரல் 1ஆம் தேதி 2 ஆயிரம் ரூபாய் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய அரசு கடந்த சில மாதங்களாக நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு பல்வேறு நிதி உதவிகளை தொடர்ந்து அளித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் பயன் அடைந்துள்ளனர். அதிலும் குறிப்பாக விவசாயிகளுக்கு பல்வேறு நிதிகளை வழங்கி வருகிறது. இந்நிலையில் பிரதமர் கிசான் சம்மன் நிதி யோஜனாவின் கீழ் மத்திய அரசு விவசாயிகளுக்கு 3 தவணையாக 6 ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறது.
அதன்படி இந்த நிதி ஆண்டுக்கான முதல் தவணை 2000 ரூபாயை ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் வங்கி கணக்கில் செலுத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு விவசாயிகளுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த விவரங்களை https://pmkisan.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.