Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஏப்ரல் 11 முதல் 14 வரை… தடுப்பூசி திருவிழா… பிரதமர் மோடி அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் ஏப்ரல் 11 முதல் 14 ஆம் தேதி வரை தடுப்பூசி திருவிழாவை நடத்தலாம் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

சீனாவில் தோன்றிய வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதிலும் பரவத் தொடங்கியது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், தற்போது தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. ஆனால் சில நாடுகளில் கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாமல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதுமட்டுமன்றி பெரும்பாலான நாடுகளில் கோரோனோ இரண்டாவது பரவ தொடங்கியுள்ளது. அதனால் மீண்டும் ஊரடங்கு அமல் படுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. மேலும் உலக நாடுகள் அனைத்தும் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளன.

இந்நிலையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைத்து மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது இரவு நேர ஊரடங்கு இரவு 9 மணி முதல் மாலை 5 மணி வரை அமல் படுத்துவது நல்லது என அனைத்து மாநில முதல்வர்களுக்கும் பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார். இரவு நேர ஊரடங்கு உள்ள பகுதிகளில் கொரோனா ஊரடங்கு என்ற வார்த்தையை பயன்படுத்த வேண்டாம். மேலும் ஏப்ரல் 11 முதல் 14 ஆம் தேதி வரை தடுப்பூசி திருவிழாவை நடத்தலாம். கொரோனா முதல் அலையை கடந்துவிட்டோம். தற்போது இரண்டாவது அலையை எதிர்த்து நாம் போரிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |