Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஏப்ரல் 13 வரை கால அவகாசம் நீட்டிப்பு… அதிரடி உத்தரவு…!!!

இந்தியாவில் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நடைமுறைக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. போக்குவரத்து சேவைகள் அனைத்தும் முடக்கப்பட்ட தால் மக்கள் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தனர். அதிலும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தது. அதன் பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், பெரும்பாலான பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமன்றி கொரோனா காலத்தில் பல சிக்கல்கள் ஏற்பட்டன. மேலும் நாட்டின் பொருளாதாரமும் மிகவும் பாதிக்கப்பட்டது.

தற்போது படிப்படியாக ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கி உள்ளதால் ஊரடங்கு அமல்படுத்தப்படும் நிலை உருவாகியுள்ளது. இந்நிலையில் பொறியியல் கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்கும் நடைமுறை கொரோனா பரவல் காரணமாக இணையத்தில் நடத்தப்பட உள்ளது. இதற்கான முன்பதிவு கடந்த மார்ச் 9ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், கால அவகாசத்தை ஏப்ரல் 13ம் தேதி வரை நீட்டித்து ஏஐசிடிஇ உத்தரவிட்டுள்ளது. இந்த வாய்ப்பை கல்லூரிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளது.

Categories

Tech |