கொரோனா பரவல் காரணமாக சர்வதேச விமானங்களுக்கான தடை ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக போக்குவரத்து சேவை முற்றிலும் முடங்கியது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன் முக்கிய பகுதியாக போக்குவரத்து சேவை மீண்டும் தொடங்கியுள்ளது. இருந்தாலும் குறிப்பிட்ட அளவிலான பேருந்துகள், ரயில்கள் மற்றும் விமானங்கள் மட்டுமே இயக்கப்பட்டு வருகின்றன. மக்களின் தேவைக்கு ஏற்றவாறு சிறப்பு ரயில்களும் இயங்கிக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அதனால் உலக நாடுகள் அனைத்தும் அச்சமடைந்துள்ளனர். கொரோனா பரவல் காரணமாக சர்வதேச விமானங்களுக்கான தடை ஏப்ரல் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகளால் ஒப்புதல் வழங்கப்பட்டு இயக்கப்படும் சர்வதேச விமானங்களுக்கு இது பொருந்தாது என்றும் சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால் நாடு முழுவதும் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.