தொழில் பயிற்சி நிறுவனங்களின் மாணவர்களுக்கு தேசிய அளவில் நேற்று பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் காணொளி மூலம் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், நாட்டின் முதல் ஐடிஐ கடந்த 1950 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அதன் பிறகு 70 ஆண்டுகளில் 10,000 ஐடிஐ-க்கள் நிறுவப்பட்டது. ஆனால் எனது அரசின் கடந்த எட்டு ஆண்டுகளில் 5000 புதிய ஐடிகள் நிறுவப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஐடிக்களில் 4 லட்சம் புதிய இடங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. மாறிவரும் காலகட்டத்திற்கு ஏற்ப இளைஞர்கள் தங்களது திறன்களை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த நூற்றாண்டை இந்தியாவினுடையதாக மாற்ற கல்வியுடன் திறனிலும் வல்லவர்களாக இளைஞர்கள் இருப்பது மிகவும் முக்கியம். மேலும் பள்ளிகள் அளவில் திறன் மேம்பாட்டை ஊக்குவிக்கும் கூடிய வகையில் நாடு முழுவதும் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட திறன் மேம்பாட்டு மையங்கள் தொடங்கப்படும். அதனைத் தொடர்ந்து 9 லட்சம் ஐடிஐ மாணவர்களுக்கான திறன்சார் பட்டமளிப்பு நிகழ்வில் 40 லட்சத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் காணொளி மூலம் இணைந்திருப்பது புதிய வரலாறாகும்.
நான்காவது தொழில்நுட்ப புரட்சி காலகட்டத்தில் இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றும் குறியீட்டு முறை, செயற்கை நுண்ணறிவு, ரோபாட்டிக்ஸ், முப்பரிமான அச்சு முறை, ஆளில்லா விமான தொழில் நுட்பம் சார்ந்த பயிற்சிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஐடிஐயை பயிற்சிகளால் கிராமப்புறங்களிலும் மாணவர்களுக்கு ஏராளமான வாய்ப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றனர். ஐடிஐ-க்களை மேம்படுத்தலில் மத்திய அரசு தொடர்ந்து அக்கறை காட்டி வருகிறது. புதிய கல்விக் கொள்கை அமலாக்கத்திற்கு பிறகு அனுபவ ரீதியிலான கற்றல் ஊக்குவிக்கப்படும். திறன் மேம்பாட்டு பயிற்சிகள் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்படும். உலகின் மிகப்பெரிய நாடுகளில் திறன்மிக்க பணியாளர்களின் தேவை அதிகம் உள்ளது. இந்தியாவில் திறன் முக்கிய பணியாளர்களின் வல்லமையும் பெரும் சவால்களுக்கு தீர்வு அளிக்கக்கூடிய நமது இளைஞர்களின் திறனும் கொரோனா காலத்தில் நிரூபணமானது என்று அவர் தெரிவித்துள்ளார்.