நாடு முழுவதும் உள்ள மாநகராட்சிகள், நகராட்சிகளில் துப்பரவு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் பல லட்சம் ஒப்பந்த ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவர்களுக்கு. மருத்துவக் காப்பீட்டு வசதிகிடையாது. இந்நிலையில், இவர்களை இஎஸ்ஐ காப்பீட்டுத் திட்டத்தில் மத்திய அரசு சேர்த்துள்ளது. இதுகுறித்து மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சா் கங்வார் கூறுகையில், ‘‘மாநகராட்சி, நகராட்சி ஒப்பந்த ஊழியர்கள் இஎஸ்ஐ திட்டத்தின் மூலமாகஅனைத்து இனி மருத்துவ பலன்களையும் பெறலாம். நாடு முழுவதும் 160 மருத்துவமனைகள், 1500க்கும் மேற்பட்ட இஎஸ்ஐ மருந்தகங்கள் மூலமாக சிகிச்சை பெறலாம். இதை அமல்படுத்தும்படி அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது’’ என்று கூறியுள்ளார்.
Categories