Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஒரே மாதிரி டிரைவிங் லைசென்ஸ்…. மத்திய அரசு அதிரடி உத்தரவு…..!!!!

இந்தியாவில் சர்வதேச ஓட்டுனர் உரிமம் வழங்குவதில் நாட்டின் குடிமக்களுக்கு சிறந்த வசதிகளை ஏற்படுத்துவதற்கான புதிய அறிவிப்பை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் வழங்கப்படும் சர்வதேச ஓட்டினார் உரிமங்களின் வடிவம், அளவு,முறை மற்றும் வண்ணம் ஆகியவற்றில் வேறுபாடுகள் இருந்து வருகின்றன.

அதன் காரணமாக வெளிநாடுகளில் இந்த சர்வதேச ஓட்டுனர் உரிமத்தை பயன்படுத்தும் குடிமக்கள் சிரமங்களை சந்தித்து வருவதால் ஜெனிவா ஒப்பந்தத்தின்படி நாடு முழுவதும் ஒரே மாதிரியான சர்வதேச ஓட்டுனர் உரிமம் வழங்கப்படுகிறது.ஓட்டுனர் உரிமத்துடன் சர்வதேச ஓட்டுனர் உரிமத்தை இணைப்பதற்கு qr கோடு விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. உதவி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த புதிய அறிவிப்பு விரைவில் நாடு முழுவதும் அமல்படுத்தப்படும் எனவும் கூறியுள்ளது.

Categories

Tech |