Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும்…. பெண்களுக்கு சூப்பர் குட் நியூஸ்….!!!!

நாட்டிலுள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்கள் உதவி மையங்கள் திறக்கப்படும் என்று மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இராணி தெரிவித்துள்ளார். பெண்களுக்கு எதிராக நடைபெறும் தாக்குதல் சம்பவங்களில் நீதி கிடைக்கும் வகையில் இந்த மையங்கள் செயல்படும். தற்போது 704 உதவி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இவற்றின் மூலம் 70 லட்சம் பெண்கள் உதவிகளைப் பெற்றுள்ளனர் என்று அவர் கூறியுள்ளார். பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தால் நாட்டில் ஆண்-பெண் பாலின விகிதம் 914-ல் இருந்து 937 ஆக அதிகரித்துள்ளது. நடப்பு ஆண்டில் மேலும் 300 பெண்கள் உதவி மையங்களை திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்று ஸ்மிரிதி இரானி கூறினார்.

Categories

Tech |