நாடு முழுவதும் அனைத்து வாகனங்களுக்கும் பாஸ்டேக் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் அதை ரீசார்ஜ் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
நாடு முழுவதும் வாகனங்களில் பாஸ்டேக் பெறுவதற்கான கால அவகாசம் பிப்ரவரி 15ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. நாடு முழுவதும் நாளை முதல் அனைத்து வாகனங்களிலும் பாஸ்ட்டேக் கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளை ஒரே ஒரு வரிசையில் ரொக்கம் செலுத்தி வாகனங்கள் பயணிக்க பிப்ரவரி 15ஆம் தேதி வரை அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து பாஸ்டேக் ரீசார்ஜ் செய்யும் திட்டத்தில் ஏற்கனவே 20க்கும் மேற்பட்ட வங்கிகள் இணைந்துள்ளன. இதில் முன்னதாகவே நீங்கள் உங்கள் யுபிஐ மற்றும் வங்கிகள் மூலம் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம். தற்போது கூகுள் பே மற்றும் போன் பே போன்ற செயலிகள் மூலம் ரீசார்ஜ் செய்வது எப்படி என தெரிந்து கொள்ளலாம் வாருங்கள். போன் பே மூலம் ரீசார்ஜ் செய்ய நினைப்பவர்கள், உங்கள் செயலியில் பாஸ்டேக் என்ற ஐகானை கிளிக் செய்யவும். அதிலிருந்தே வங்கிகளின் பட்டியலில் இருந்து, உங்கள் பாஸ்டேக் வளர்க்கும் வங்கியை தேர்வு செய்ய வேண்டும்.
அதன் பிறகு தேவையான அனைத்து விவரங்களையும் உள்ளிடவும். அதனைத் தொடர்ந்து நீங்கள் ரீ-சார்ஜ் செய்ய கட்டணம் செலுத்துங்கள். கூகுளேபே மூலமாக ரீசார்ஜ் செய்வதற்கு, மொபைலில் கூகுள் பே செயலியை திறந்து new என்பதை தேர்வு செய்ய வேண்டும். அதன்பிறகு கொடுக்கப்பட்டுள்ள மெனுவில் இருந்து more என்பதை கிளிக் செய்து ரீசார்ஜ் ஆப்சனை தேர்வு செய்யவும். பிறகு உங்களுக்கான வங்கியை தேர்வு செய்ய வேண்டும். தொடர்ந்து கேட்கப்படும் விவரங்களை உள்ளிடவும். அதன்பிறகு ஃபாஸ்டேக் ரீசார்ஜ் செய்ய பணம் செலுத்துங்கள்.