நாடு முழுவதும் உள்ள காவலர்களுக்கு ஒரே மாதிரியான சீருடை வழங்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து ஒரே நாடு ஒரே போலீஸ் சீருடை திட்டத்தை செயல்படுத்த ஆலோசித்து வருவதாகவும் இதற்காக ஒன்பது விதமான ஆடைகள் வடிவமைக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்கிடையே மாநில டிஜிபிக்களுக்கும் போலீசாரின் சீருடை, தொப்பி, சின்னங்கள் அனைத்து விவரங்களையும் தெரிவிக்கும்படி கூறப்பட்டுள்ளது.
ஆனால் இதற்கு தமிழகம், மேற்கு வங்கம், மகாராஷ்டிரா, பஞ்சாப், ஆந்திரா, உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், கோவா, அசாம் உள்ளிட்ட மாநிலங்கள் பதிலளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. காவலர் சீருடை பற்றிய விவரங்களை தேசிய பாதுகாப்பு கவுன்சில் கேட்டிருப்பது மாநில அரசுகளுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. காவலர்களை பொதுப்பட்டியலில் கொண்டுவருவதற்காக மத்திய அரசின் நடவடிக்கையால் இருக்கலாம் எனவும் கருதுகின்றனர்.