இந்தியாவில் மத்திய அரசின் பொது விநியோக திட்டத்தின் கீழ் அனைத்து மாநிலங்களிலும் ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு மலிவு விலையில் அரிசி, கோதுமை, பருப்பு மற்றும் பிற வீட்டு உபயோக பொருட்கள் மாதம் தோறும் வழங்கி வருகின்றனர். இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் முதல் கொரோனா பரவல் காரணமாக முழு ஊரடங்கு போடப்பட்டது. அப்போது பிரதமர் கரீப் கல்யாண் திட்டத்தின் மூலம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு கூடுதலாக 5 கிலோ அரிசி மற்றும் கோதுமை வழங்கப்பட்டது. மேலும் இந்தியா முழுவதும் வேலைக்காக இடம்பெயரும் தொழிலாளர்களுக்கு ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு இந்தத் திட்டம் நடைமுறையில் உள்ளது.
அதன்படி புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் வசிக்கும் மாநிலங்களில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் பொருட்களை பெற்று வருகின்றனர். இந்நிலையில் 2014-2017 ஆம் ஆண்டு வரையில் சுமார் 4.28 கோடி போலி ரேஷன் கார்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு அதனை ரத்து செய்யப்பட்டது என்று மத்திய பொது வினியோகத் துறை இணை அமைச்சர் சாத்வி நிரஞ்சன் ஜோதி மாநிலங்களவையில் தெரிவித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து பொது விநியோகத் திட்டத்தில் தகவல் தொழில்நுட்ப பயன்பாடு குடும்ப அட்டைகளின் தரவுகள், போலி அட்டைகளை நீக்குதல், நிரந்தரமான குடிபெயர்வு மற்றும் இறப்புகள் ஒரே பெயரில் இரண்டு அட்டைகள் என்று மொத்தம் இதுவரை 4.25 கோடி ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் குடும்ப அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கவில்லை என்று எந்த குடும்ப அட்டையும் இதுவரை ரத்து செய்யப்பட வில்லை. எனவே ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை வருகின்ற டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.