Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் சமையல் எண்ணெய் விலை உயர்வு… அதிர்ச்சி தரும் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் சமையல் எண்ணெய் விலை உயர்ந்துள்ளதாக மத்திய அமைச்சர் அதிர்ச்சி தரும் தகவலை வெளியிட்டுள்ளார்.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது.

அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டன. அதன் பிறகு தற்போது வரை நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வந்தது. அதனால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள்.

இந்நிலையில் உள்நாட்டில் உற்பத்தி போதுமான அளவு இல்லாததால் சமையல் எண்ணெய் விலை உயர்ந்துள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்துள்ளார். கடந்த ஓராண்டில் கடலை எண்ணெயின் விலை கிலோவுக்கு 120 ரூபாயிலிருந்து ரூ.180 ஆகவும் கடுகு எண்ணெய் 110 ரூபாயிலிருந்து ரூ.147 ஆகவும், சோயா எண்ணெய் ரூ.90லிருந்து ரூ.130 ஆகவும், சூரியகாந்தி எண்ணெய் ரூ.105லிருந்து ரூ.140 ஆகவும், பாமாயில் விலை ரூ.82.50-லிருந்து ரூ.160 ஆகவும் அதிகரித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் பொதுமக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |