Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் சிறு ஊரடங்கு, பயண கட்டுப்பாடு… பிரதமர் மோடியிடம் பரபரப்பு…!!!

நாட்டில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மீண்டும் சிறு பொது முடக்கங்கள் பயணம் கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் உலக நாடுகள் முழுவதும் பரவத் தொடங்கியது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்படி இந்தியாவிலும் கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அப்போது போக்குவரத்து சேவை முற்றிலும் முடக்கப்பட்டது.

அதன் பிறகு நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், கொரோனா பாதிப்பு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வு கள் அறிவிக்கப்பட்டன. அதன் பிறகு தற்போது வரை நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு குறைந்து கொண்டே வந்தது. அதனால் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகிறார்கள்.

இந்நிலையில் மகாராஷ்டிரா, கேரளா, பஞ்சாப், குஜராத், கர்நாடகா மற்றும் தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் மத்திய அரசு புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் மீண்டும் ஊரடங்கு கடைபிடிக்கப்படுகிறது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளதால் கடும் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் கொரோனாவை கட்டுப்படுத்த பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் எம்ஸ் மருத்துவமனை இயக்குநரும் நிபுணர் குழு உறுப்பினருமான மருத்துவர் ரந்தீப் குலேரியா, கொரோனா பரவலை கட்டுப்படுத்த மீண்டும் சிறு பொது முடக்கங்கள், பயண கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என மோடியிடம் பரிந்துரை செய்துள்ளார்.

Categories

Tech |