இந்தியாவில் கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருகிறது. அதனால் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் நாடு முழுவதும் விதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா ஊரடங்கு காரணமாக நாடு முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரிகளில் நடக்க இருந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. அது மட்டுமல்லாமல் அனைத்து விதமான தேர்வுகளும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சில முக்கிய பணிகளுக்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நாடு முழுவதும் 2021- 2022 ஆம் ஆண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது. இதற்கு முன்பு ஜூலை 31-ஆம் தேதி வரை அவகாசம் இருந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக செப்டம்பர் 30ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.